கர்நாடகாவில் பெரும் சோகம்.. தேர் திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் 2 பேர் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டல்பேட் என்ற இடத்தில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கோயில் தேர்த்திருவிழா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் பர்வதாம்பாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இந்த தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் கோஷமிட்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். இதில் ஒருகட்டத்தில் பக்தர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் அதிவேகமாக கூட்டத்திற்குள் சென்றது. இதில் தேரின் சக்கரம் ஏறியதில் ஒருவரும், கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவரும் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பக்தர்கள் அதிக அளவில் கூடி வடத்தை பிடித்து இழுத்ததால் தேர் தனது கட்டுப்பாட்டை இழந்ததாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அந்த தொகுதி எம்எல்ஏ நிரஞ்சன் குமார் அரசு மருத்துவமனைக்கு சென்று தேர் சக்கரத்தில் பலியான சர்பபூஷன் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சுவாமி ஆகியோரின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.

மேலும், தேர்த்திருவிழாவில் இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2 killed in Karnataka chariot festival accident


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->