தனிமைப்படுத்தப்பட்ட சூடானிலிருந்து மீட்கப்பட்ட 117 இந்தியர்கள்..! காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


வட கிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் ஆட்சியை கைப்பற்ற ராணுவத்திற்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே கடந்த மூன்று வாரங்களாக கடும் உள்நாட்டு போர் நடைபெற்று வரும் நிலையில் இதுவரை சூடானில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், சூடானில் உள்ள இந்தியர்களை ஆப்ரேஷன் காவேரி திட்டத்தின் கீழ் மத்திய அரசு மீட்டு வருகிறது. இதுவரை சூடானிலிருந்து 2000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்ட நிலையில்,1300 பேர் விமான மூலமாக இந்தியா வந்தடைந்துள்ளனர்.

இதில் சூடானிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட 117 பேர் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்படாததால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தனிமைப்படுத்தப்பட்ட அனைத்து பயணிகளும் ஏழு நாட்களுக்குப் பிறகு அறிகுறியற்றவர்களாக இருந்தால் விடுவிக்கப்படுவார்கள் என்றும், சூடானிலிருந்து திரும்பும் அனைத்து இந்தியர்களுக்கும் முறையான மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

117 Indians rescued from Sudan isolated


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->