பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு நூறு சதவீதம் கட்டண சலுகை - ஆட்டோ ஓட்டுனர்கள் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி பிறந்தநாளை முன்னிட்டு நூறு சதவீதம் கட்டண சலுகை - ஆட்டோ ஓட்டுனர்கள் அறிவிப்பு.!

இன்று பாரத பிரதமர் நரேந்திர மோடியின் 73-வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவினை முன்னிட்டு பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், கட்சியினர் பல்வேறு வகைகளில் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

அந்த வகையில், சூரத் நகரில் ஆட்டோ ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகளை அறிவித்துள்ளனர். அதாவது, சுமார் ஆயிரம் ஆட்டோ ஓட்டுநர்கள் 30 சதவீதம் கட்டண சலுகை அறிவித்துள்ளனர். அதே போல் பிரதமரின் 73-வது பிறந்த நாள் என்பதால், எழுபத்து மூன்று ஆட்டோ ஓட்டுநர்கள் நூறு சதவீதம் கட்டண சலுகை அறிவித்துள்ளனர்.

இவர்களுக்கு, அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. பூர்ணேஷ் மோடி, "மோடியின் 73-வது பிறந்த நாளில் 100 சதவீதம் கட்டணத்தை தள்ளுபடி செய்யும் 73 ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.

கடந்த காலங்களிலும் இதுபோன்ற சலுகைகளை ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்தனர். இதேபோல், மோடியின் ஓராண்டு ஆட்சி நிறைவை முன்னிட்டு, சதீஷ் பிரபு என்ற ஆட்டோ ஓட்டுநர் அன்றைய தினம் 5 கிமீ தூரம் தனது ஆட்டோவில் பயணம் செய்வதற்கு ஒரு ரூபாய் கட்டணம் நிர்ணயித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

100 percentage free travel auto drivers announce for PM modi brithday


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->