உலக அளவில் 8 நபர்களில் ஒருவருக்கு மனநலம் பாதிப்பு - புதுச்சேரி சுகாதார இயக்குனர் - Seithipunal
Seithipunal


உலக அளவில் 8 பேரில் ஒருவருக்கு மனநல பாதிப்பு உள்ளதாக புதுச்சேரி சுகாதார இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை இயக்குனர் ஸ்ரீராமுலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

மனநலம் குறித்த விழிப்புணர்வை உலக மக்களிடையே ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10-ஆம் தேதி உலக சுகாதார நிறுவனத்தால் உலக மனநல தினம் அனுசரிக்கப்படுகிறது. இதேபோல், இந்த ஆண்டுக்கான கருப்பொருள் உலக மக்கள் அனைவரின் மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தும் செயலே முதன்மையானதாக கருத வேண்டும்.

உலக அளவில் 8 நபர்களில் ஒருவர் மனநல பாதிப்பு உள்ளவராக உள்ளனர். இளம் வயதிலேயே அதிக பாதிப்பிற்கு உள்ளாகி உள்ளனர். உலக சுகாதார நிறுவனம் 10 முதல் 19 வயது வரையிலுள்ள வளர் இளம் பருவத்தினரில் 7 பேரில் ஒருவர் மனநல பிரச்சினையில் உள்ளதாக தெரிவிக்கிறது. 

மேலும் இந்த வயதினர் ஆண்டு தோறும் சராசரியாக 45,800 பேர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதாவது 11 நிமிடத்திற்கு ஒருவர் தற்கொலை செய்து கொள்கின்றனர். கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு உலக அளவில் தற்கொலை எண்ணங்கள் மக்களிடையே அதிகரித்து உள்ளது. 

இதில் மனப்பதற்றம் மற்றும் மனஅழுத்த நோய்கள் 25 சதவீதம் அதிகரித்து உள்ள நிலையில், வளர்ந்து வரும் சமூக மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள், நீண்ட நாள் கருத்து வேறுபாடுகள், வன்முறை, ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட அவசர கால நோய்கள் போன்றவைகளினால் மக்கள், மனநல பாதிப்பு அடைகின்றனர். 

இதனால் மனநல நோய் ஒருவரின் எண்ணம், செயல், உணர்வுகளை பாதிக்கிறது. இலவசமாக மனநல சிகிச்சை பல்வேறு மருத்துவமனைகளில் அளிக்கப்படும். எனவே மனநல சிகிச்சை பெற மக்கள் தயக்கத்தை தவிர்க்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

1 in 8 people worldwide suffer from mental illness


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->