சப்பாத்திக்கு, பூரிக்கு நிமிடங்களில் ருசியான வெள்ளை குருமா.. அசத்தலான ரெசிபி.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

பட்டை- 2 சிறிய துண்டு

ஏலக்காய்- 4

கிராம்பு- 2

கேரட்- 50 கிராம்

உருளைக்கிழங்கு- 50 கிராம் 

காலிஃப்ளவர் - 50 கிராம்

பீன்ஸ்- 50 கிராம்

பட்டாணி- 50 கிராம்

தேங்காய் - 1 கப்

சோம்பு - 2டீஸ்பூன்

சீரகம்- 2 டீ ஸ்பூன்

முந்திரிப் பருப்பு - 5

பச்சை மிளகாய் - 2

இஞ்சி பூண்டு விழுது- 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப 

எண்ணெய் - 2 தேக்கரண்டி

அரைப்பதற்கு:

மிக்ஸி ஜாரில் முதலில் துருவிய தேங்காய், மேற்க்கூறிய அளவில் சரி பாதி சீரகம், சோம்பு, பச்சை மிளகாய், பட்டை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் முந்திரி பருப்பு  தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும்.
 
செய்முறை :

அடுப்பில் குக்கரை வைத்து எண்ணெயை ஊற்றி சூடாகியதும் பட்டை கிராம்பு ஏலக்காய் பிரிஞ்சி இலை சீரகம்  சேர்த்து வதக்கவும்.

சீரகம் பொறிந்ததும் இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

பின்பு வெட்டி வைத்த காய்கறிகளை சேர்த்து, அரைத்து வைத்த தேங்காய் கலவையை சேர்த்து உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி இரண்டு விசில் வரும் வரை வேக வைத்து எடுத்தால் அசத்தலான வெள்ளை குருமா தயார்.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

White veg kuruma in minutes receipe


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->