மூக்கடைப்பு, நெஞ்சு சளிக்கு இதமான சூப் செய்வது எப்படி.?!  - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் : 

கடலை எண்ணெய் - இரண்டு ஸ்பூன்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - ஒன்று (நறுக்கியது)
கொத்தமல்லி இலை - சிறிதளவு
மிளகுத்தூள் - முக்கால் டீஸ்பூன்
கான் பிளவர் மாவு - ஒரு ஸ்பூன் 
உப்பு - தேவையான அளவு
கேரட் - நறுக்கியது ஒரு கப்
பீன்ஸ் - நறுக்கியது ஒரு கப்
முட்டைக்கோஸ் - நறுக்கியது ஒரு கப் 
சீரகம் - சிறிதளவு

செய்முறை : 

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு அதில் சீரகம் போட்டு வதக்கி, பின் நறுக்கிய வெங்காயம் மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

வெங்காயம் கண்ணாடி பதத்திற்கு வந்ததும் அதில் நறுக்கிய தக்காளியை போட்டு வதக்கவும். 

வெங்காயம் தக்காளி வதங்கியவுடன் கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ் உள்ளிட்டவற்றை போட்டு நன்றாக வதக்கவும். காய் வேகும் போதே தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம். 
 
காய் நன்றாக வதங்கிய பின், இரண்டரை டம்ளர் தண்ணீர் சேர்த்து குக்கர் முடியை போட்டு இரண்டு விசில் விடவும். 

பின், குக்கர் ஏர் எடுத்துவிட்டு மூடியை திறந்து கரண்டியை விட்டு நன்றாக கிளறி உப்பு சரியாக இருக்கிறதா என்பதை பார்த்து தேவையான அளவு போட்டுக் கொள்ளவும். 

அதன்பின் மிளகுத்தூளை சேர்த்து கொதிக்கவிட்டு, கான்பிளவர் மாவை சிறிது தண்ணீர் விட்டு கரைத்து சூப்பில் சேர்த்து இரண்டிலிருந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க விடவும். இப்போது சுவையான சூப்பரான சூப் ரெடி.! 

குறிப்பு : இந்த சூப் சளி, இருமல் பிரச்சனைகளை தடுக்க உதவும்.

மூக்கடைப்பு, நெஞ்சு சளி போன்ற பிரச்சினைகளுக்கும் இது தேவைப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to prepare soup for cold


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->