குளிர்காலத்தில் கட்டாயம் திராட்சை சாப்பிடனுமா.? காரணம் தெரிஞ்சிக்கோங்க.!  - Seithipunal
Seithipunal


குளிர்காலத்தில் ஈரப்பதம் மற்றும் பூஞ்சை தொற்றினால் நிறைய நோய்கள் ஏற்படும். இந்த நோய்களிலிருந்து திராட்சை நம்மை காக்கும் திராட்சையில் புரதம் நார்ச்சத்து பாலிபினால்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. 

திராட்சையை பாலுடன் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது. இதில், இருக்கும் நார்ச்சத்து வயிற்றுப் பிரச்சனைகளை குணப்படுத்தும். இதனால், வயிற்று உப்புசம், மலச்சிக்கல், அஜீரணம், வாய்க் கோளாறு உள்ளிட்டவை குணமாகும். இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. 

புற்றுநோய், நீரிழிவு, இதயம் குறித்த நோய்கள் போன்றவற்றின் ஆபத்தை குறைக்கும். உலர் திராட்சையை நீரில் ஊற வைத்து அந்த தண்ணீரை குடிப்பது உடலை கட்டுக்கோப்புடன் வைக்க உதவும். திராட்சை மலச்சிக்கலையும் குணப்படுத்தக்கூடியது. 

இதில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் இருப்பதால் சரும பொலிவை மேம்படுத்தக்கூடும். இதில், உள்ள வைட்டமின் சி உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். திராட்சையை பாலுடன் சூடாக்கி அந்த பாலை குடிப்பது எலும்புகளை வலுவூட்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Graphs For Snow season decease


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->