குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பும் ஆண்களுக்கு இதோ எளிமையான வழி.!  - Seithipunal
Seithipunal


பச்சையாக அப்படியே பலரும் விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் கேரட் ஒன்றாக இருக்கிறது. கேரட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொண்டால் உடலில் தேவையற்று தேங்கும் கொழுப்புகள் கரைந்துவிடும். 

கேரட்டில் உள்ள நார்சத்து, பொட்டாசியம் போன்றவை காரணமாக உடலுக்கு நன்மை கிடைக்கிறது, கண்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குணமடைந்து கண்கள் ஆரோக்கியம் அடையும். மாலைக்கண் நோய் பிரச்சனை குறையும். 

வைட்டமின் ஏ சத்து கேரட்டில் நிறைந்து காணப்படுவதால் கண்களின் பார்வை திறனை அதிகரிக்கிறது. தோலுக்கு புதுப்பொலிவு தருகிறது. உடலினை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்கிறது. 

தினமும் ஒரு கேரட்டை சாப்பிட்டு வந்தால் உடலில் தேவையற்ற கொழுப்புகள் வெளியேற்றப்பட்டு, குடல் புண்கள் வராமல் தடுக்கப்படும். நெஞ்சில் ஏற்படும் எரிச்சல் சரியாக கேரட் சாறு தினமும் குடிக்கலாம். 

கேரட் சாறுடன் இஞ்சி சாறு சிறிதளவு சேர்த்து குடித்தால் வாயு தொல்லை சரியாகும். வயிற்றில் ஏற்பட்டு இருக்கும் கற்கள், புண்கள், கட்டிகள் பிரச்சனை குணமாகும். மஞ்சள் காமாலை பிரச்சனைக்கு கேரட் சாறை குடிக்கலாம். 

கேரட் சாறுடன் எலுமிச்சை சாறை சேர்ந்து குடித்தால் பித்த கோளாறுகள் சரியாகும். சிறுநீர் கழிக்கும் சமயங்களில் ஏற்படும் எரிச்சலை குணப்படுத்த கேரட்டை பச்சடி போல செய்து சாப்பிடலாம். வாரத்திற்கு மூன்று நாட்கள் கேரட் சாப்பிட்டால் மாலைக்கண் நோய் ஏற்படாது. 

ஆண்கள் கேரட்டை அதிகளவு சாப்பிட்டால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமல்லாமல், விந்தணுவின் அடர்த்தியும் அதிகரிக்கும். குழந்தை பெற்றுக்கொள்ள நினைப்பவர்கள் தினமும் கேரட் சாப்பிடலாம். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

carrot for making baby


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->