உடல் எடை குறைப்பு முதல் கண் பார்வையை ஆரோக்கியமாக வைக்கும் கேரட்.! - Seithipunal
Seithipunal


கண்களை கவரும் வகையில் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் கேரட் பார்ப்பதற்கு மட்டுமல்ல சாப்பிடுவதற்கும் சிறந்த உணவுப் பொருளாகும். அதேபோல் சுவைக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

அந்த வகையில் கேரட் சாப்பிடுவதால் உடல் எடை குறைப்பு முதல் ஆரோக்கியமான கண் பார்வையை பெறுவது வரை ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

கேரட்டில் பொட்டாசியம் வைட்டமின் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை ரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும் கண் பார்வையை சீராக்குதல், ஆற்றலை அதிகரித்தல், எலும்புகளை உறுதியாக்குதல் போன்ற பல நன்மைகளை கொடுக்கிறது.

கேரட்டில் உள்ள இனிப்பு சுவை சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது. ஏனென்றால் கேரட் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மேலும் கேரட்டில் உள்ள நார்ச்சத்து நன்மை அளிக்கக்கூடிய செல்களை உருவாக்குகிறது.

கேரட்டை அடிக்கடி சாப்பிடுவதால் ரத்த கொழுப்பு குறையும். அதன் காரணமாக உடல் எடையை எளிதாக குறைக்கலாம்.

மேலும் இதய பிரச்சினைகள் ரத்த கொழுப்பு அதிகரிப்பால் ஏற்படக்கூடியது. எனவே கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் ரத்த கொழுப்பு குறையும். காரணமாக இதய நோய்கள் ஏற்படுவதை தடுக்கிறது.

கேரட்டில் இருக்கும் வைட்டமின் கே கண்களில் பார்வையை தெளிவாக்கி ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. மேலும் கேரட்டில் உள்ள வைட்டமின்கள் பல நன்மைகளை கொடுக்கிறது.

உடல் எடையை குறைக்க கேரட் முக்கியமான உணவுப் பொருளாகும். கேரட்டில் குறைவான கலோரிகள் இருப்பதால் டயட்டில் இருப்பவர்கள் கேரட்டை சாப்பிடுவது நல்லது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Benefits of carrots


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->