லலிதா ஜுவல்லரியில் நடந்தது கொள்ளை அல்ல.. மோசடி? வெளியான தகவல்!! - Seithipunal
Seithipunal


திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளையடித்த வழக்கில் திருடியவன் யார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேற்று அதிகாலை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி என்ற நகை கடை நிறுவனத்தில் பின்புறமாக துளையிட்டு சுமார் 13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை இருவர் கொள்ளையடித்தனர். 

கொள்ளை அடித்தது யார் என தெரியாமல் விழிபிதுங்கி நின்ற போலீசார்,  அதிரடியாக 7 தனிப்படைகள் அமைத்து விசாரணையை வேகமாக முடக்கினர். இன்று காலை வரை புதுக்கோட்டையில் தீவிரமாக தேடி வந்த தனிப்படை போலீசார், விசாரணையை அடுத்தகட்ட நிலைக்கு நகர்த்தி இருந்தனர். 

கொள்ளையடித்தவர்கள் வட மாநிலத்தவர்கள் என எதிர்பார்த்திருந்த நிலையில் சிக்கியவர் திருவாரூரை சார்ந்தவர் என தகவல் தெரியவந்துள்ளது. சிக்கியவன் பெயர் மணிகண்டன் என்றும் அவன் மடப்புறத்தை சார்ந்தவன் எனவும், மணிகண்டன் சிக்கிய அதே நேரத்திலே சுரேஷ் என்பவன் தப்பி சென்றுள்ளான். 

இந்தியாவில் பல கொள்ளைகளை நடத்தியுள்ள முருகன் என்பவனின் உறவினர் தான் சுரேஷ் என தெரிய வந்துள்ளது. சுரேஷை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இது ஒரு புறம் இருக்க, நடைபெற்ற இந்த சம்பவம் திருட்டு அல்ல எனவும், நகைக்கடை நிர்வாகத்தால் நடத்தப்பட்ட நாடகம் எனவும் சமூக வலைத்தளங்களில் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த திருட்டு சம்பவம், இன்சூரன்ஸ் பணம் பெறுவதற்கான மோசடி நடவடிக்கை எனவும் கூறி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lakithaa jewellery robbery memes


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->