UPSC தேர்வு தேதியில் மாற்றம்..‌.! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மக்களவைக்கான தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் கடந்த சனிக்கிழமையன்று அறிவித்தது. இதன் காரணமாக, யுபிஎஸ்சி தேர்வு கால அட்டவணையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் மே 26, 2024 இல் திட்டமிடப்பட்டிருந்த சிவில் சர்வீசஸ் தேர்வு‌ தேதியை மாற்றியமைத்துள்ளது. பிரிலிம்ஸ் தேர்வு ஜூன் 16ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வுகள் செப்டம்பர் 20-ம் தேதி தொடங்கி ஐந்து நாட்களுக்கு நடைபெற உள்ளது.

இதற்கு முன்னதாக, சிவில் சர்வீசஸ் தேர்வுகள் (சிஎஸ்இ) 2024 க்கான பதிவு காலக்கெடுவை நீட்டித்துள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பதிவு செய்வதற்கான கடைசி தேதி மார்ச் 6 வரை நீட்டிக்கப்பட்டது. திருத்தச் செய்ய மார்ச் 7 முதல் மார்ச் 13 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

upsc exam date change


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->