பள்ளி மாணவர்களே..!! "மே 10-க்குள் பொதுத் தேர்வு முடிவுகள்".. அரசு தேர்வு துறை எடுத்த அதிரடி முடிவு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசின் தேர்வு துறை மூலம் நடத்தப்படும் பள்ளி தேர்வுகளின் முடிவுகள் முன்கூட்டியே வெளியிட அரசு தேர்வு துறை திட்டமிட்டுள்ளது.

தமிழக அரசின் பாடத்திட்டத்தின் கீழ் 12-ம் வகுப்பு பொது தேர்வு கடந்த மார்ச் 13ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி முடிவடைந்தது. 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 5ம் தேதி முடிவடைந்தது. இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் வரும் ஏப்ரல் 20-ம் தேதியுடன் நிறைவடைகிறது

 

இதற்கிடையே 12-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி முழு வீச்சில் கடந்த மார்ச் 11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. அதே போன்று 10-ம் வகுப்பு விடைத்தாள்கள் திருத்தும் பணி மே 3ம் தேதிக்குள் நிறைவு செய்யுமாறு தேர்வு துறை அறிவுறுத்தியுள்ளது.

இதற்கு முன் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும், 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 10ஆம் தேதியும், 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 19ஆம் தேதியும் வெளியிட திட்டமிடப்பட்டது. தற்பொழுது விடைத்தாள் திருத்தும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதால் முன்கூட்டியே தேர்வு முடிவுகளை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

அதன்படி 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 5ம் தேதியும், 11 மற்றும் 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் ஒரே நாளில் மே 10ம் தேதி  வெளியிடப்பட உள்ளன. இதன் மூலம் மே 10ம் தேதிக்குள் அனைத்து தேர்வு முடிவுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனியார் பள்ளி ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணிக்கு தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என இன்று தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tngovt decide release all school exam results before May10


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->