#Breaking : சமூக நல மற்றும் மகளிர் உரிமத்துறை.. தேர்வு மையங்களில் அதிரடி மாற்றம்.!   - Seithipunal
Seithipunal


நவம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள சமூக நல மற்றும் மகளிர் உரிமை துறை உதவி இயக்குனர் பதவிக்கான கணினி வழி தேர்வுக்கான தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டுள்ளது.

நிர்வாக காரணங்களால் இந்த தேர்வு மையங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சேலம், நெல்லை, வேலூர் உள்ளிட்ட மையங்கள் நீக்கப்பட்ட நிலையில் மதுரை, சென்னை, திருச்சி மற்றும் கோவையில் மட்டும் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து வெளியாகியுள்ள அறிவிப்பின்படி, "சமூக நலம் மற்றும் மகளிர் உரிமை துறையில் அடங்கிய உதவி இயக்குனர் (பெண்கள் மட்டும்) பதவிக்கான கணினி வழி எழுத்து தேர்வு வரும் நவம்பர் 5ஆம் தேதி சென்னை, கோவை, சேலம், மதுரை, திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூர் உள்ளிட்ட ஏழு மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற இருந்தது.

நிர்வாக காரணங்களால் தற்போது மதுரை, சென்னை, கோவை மற்றும் திருச்சி உள்ளிட்ட 4 மாவட்ட தேர்வு மையங்களில் மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் நீக்கப்பட்டுள்ள மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பின்வரும் தேர்வு மையங்களில் இணைக்கப்பட்டுள்ளனர்.

முழு விவரங்களுக்கு:


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Social welfare department exam Centres Changed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->