நீட் தேர்வு முடிவுகள் எப்போது.? தேசிய தேர்வு முகமை அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7ம் தேதி வெளியிடப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவ படிப்புகளில் சேருவதற்காக 'நீட்' எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான 'நீட்' தேர்வு நாடு முழுவதும் கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்றது.

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வை 17 லட்சத்து 78 ஆயிரத்து 725 பேர்  எழுதினர். இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் தேதியை தேசிய தேர்வு முகமை இன்று அறிவித்துள்ளது. 

அதன்படி, நீட் இளநிலை மருத்துவ நுழைவுத்தேர்வு முடிவுகள் செப்டம்பர் 7-ம் தேதி வெளியாகும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. நீட் இளநிலை தேர்வுக்கான இறுதி விடைக்குறிப்புகள் வரும் 30-ம் தேதிக்குள் வெளியிடப்படும் எனவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NEET exam results on September 7


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->