தமிழ்நாடு சுகாதார அலுவலர் பணி தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்: 31/2022 நாள் 21.10.2022- ன் மூலமாக நேரடி நியமனத்திற்கு அறிவிக்கை செய்யப்பட்ட தமிழ்நாடு பொது சுகாதாரப் பணிகளில் அடங்கிய சுகாதார அலுவலர் பதவிக்கான காலிப்பணியிடங்களில் நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்வு 13.02.2023 அன்று முற்பகல் மற்றும் பிற்பகலில் நடைபெறவுள்ளது.

தேர்வு எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் தேர்வுக்கூட அனுமதிச்சீட்டுகள் தேர்வாணையத்தின் இணையத்தளங்களான www.tnpsc.gov.in, www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

விண்ணப்பதாரர்கள், தங்களுடைய ஒருமுறை பதிவின் (otp) தன்விவரப்பக்கம் மூலமாக மட்டுமே விண்ணப்ப எண், பிறந்ததேதி, ஆகியவற்றை உள்ளீடு செய்து தேர்வுக்கூட அனுமதிச்சீட்டினை கம்பியூட்டர் சென்டரில் பதிவிறக்கம் செய்ய முடியும் என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

hall ticket published for health officer exam


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->