பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விரைவில் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்யும் தேதி தற்போது வெளியாகியுள்ளது. 

அந்த அறிவிப்பின் படி, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வரும் 20ஆம் தேதி முதல் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகள் தொடர்பாக தலைமை ஆசிரியர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password கொண்டு தங்கள் பள்ளி மாணவர்களது ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இது குறித்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், தலைமை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஹால் டிக்கெட்டை சரியான முறையில் விநியோகம் செய்ய வலியுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 and 12 students public exam hallticket published


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->