இருந்தாலும் பார்வதிக்கு இவ்ளோ தைரியம் ஆகாது.. பாம்பு, பல்லின்னு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


சின்னத்திரையிலும் சமூக வலைதளங்களிலும் மிகவும் பிரபலமானவர் விஜே பார்வதி. இவர் யூட்யூப் சேனல்களில் வீடியோ ஜாக்கியாக இருந்து அதன் பிறகு சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிரபலமானவர். விஜய் டிவியின் பிரபலமான குக் வித் கோமாளி  நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடமும் பிரபலமானார் பார்வதி .

இது தவிர வெள்ளித்திரையில் இரண்டு திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார் இவர். தன்னுடைய பிசியான  வேலைகளுக்கிடையையும் சமூக வலைதளங்களில் தன்னை ஆக்டிவாக வைத்துக் கொள்பவர். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ளும் பழக்கமுடைய பார்வதி பயணங்களின் போது எடுக்கப்படும் புகைப்படங்களையும் வீடியோக்களையும்  சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருவார்.

சமீபத்தில் இவர் எக்ஸோடிக் பெட்ஸ்  என்று அழைக்கப்படும் அரிதான பிராணிகளை வளர்க்கும் பண்ணைக்கு  சென்றிருக்கிறார். அந்தப் பண்ணையில் இருக்கும் அனகோண்டா பாம்பை  தன்னுடைய கையில் பிடித்த வாரம்  கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றி இருக்கிறார் இவர்.

இந்தப் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் இந்த புகைப்படங்களை பகிர்ந்து வருவதோடு  அவற்றிற்கு பின்னூட்டங்களிட்டும்   மற்றும் பார்வதியின் தைரியத்தையும் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vj parvathis astonishing courage pics


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->