விஷாலின் வீரமே வாகை சூடும் திரைப்படம் 1490 தியேட்டர்களில் ரிலீஸ்.! ரசிகர்கள் உற்சாகம்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சரவணன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஜனவரி 26ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகும் என ஏற்கனவே படக்குழு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

சமீபத்தில், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள், டீஸர் மற்றும் தீம் மியூசிக் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துள்ளது. இந்தப் படம் கடந்த ஆகஸ்ட் மாதமே வெளியாகும் என்று கூறப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் படப்பிடிப்புகள் முடியாத நிலையில் இருந்து வந்தது. தற்போது, படப்பிடிப்புகள் முடிந்த நிலையில் இந்த படம் வரும் பிப்ரவரி 4ஆம் தேதி தமிழகத்தின் 560 தியேட்டர்களிலும், ஆந்திராவில் 750 தியேட்டர்களிலும், கர்னாடகாவில் 180 தியேட்டர்களிலும் வெளியாகவுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vishal Movie releases on 1490 theatres


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->