நடிகர் விக்ரமின் 'தங்கலான்' திரைப்படம் எப்போது ரிலீஸ்.. வெளியான அசத்தல் தகவல்.! - Seithipunal
Seithipunal


கேஜிஎஃப் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து அங்கு நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீளம் ப்ரொடக்ஷன்ஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தில் முதல்முறையாக சியான் விக்ரம் ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் இவருடன் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

கே ஜி எஃப் தங்க சுரங்கங்களில் இத்திரைபடத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில், சமீபத்தில் நடிகர் விக்ரமுக்கு விலா எலும்பு முறிவு ஏற்பட்டதால் ஓய்வு எடுத்து வந்த நிலையில், தற்போது மீண்டும் நடித்து வருகிறார்.

அந்த வகையில் தங்கலான் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தங்கலான் திரைப்படத்திற்கு நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதால், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikram in thangalan movie possible to release on 2024 Pongal


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->