தங்கலான் படத்தில் 3 விதமான தோற்றத்தில் நடிகர் விக்ரம்.. வைரலாகும் புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


கேஜிஎஃப் தங்க சுரங்கத்தை மையமாக வைத்து அங்கு நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகி வரும் திரைப்படம் தங்கலான். இந்தத் திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா மற்றும் இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீளம் ப்ரொடக்ஷன்ஸ் ஆகியவை இணைந்து தயாரிக்கின்றனர்.

இந்தத் திரைப்படத்தில் முதல்முறையாக சியான் விக்ரம் ரஞ்சித் இயக்கத்தில் நடித்து வருகிறார். மேலும் இவருடன் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தத் திரைப்படத்திற்கு ஜி. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.

கே ஜி எஃப் தங்க சுரங்கங்களில் இத்திரைபடத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், நேற்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்தாக படக்குழு அறிவித்திருந்தது. இந்த திரைப்படத்தில்  நிறைய கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதால், இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில் தங்கலான் படத்தில் நடிகர் விக்ரம் 3 தோற்றங்களில் நடித்துள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vikram 3 get up in thangalan movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->