என்ன விஜய் டிவி பிரியங்காவின் சம்பளம் இத்தனை லட்சமா.?! ஹீரோயின்களை மிஞ்சிடுவாங்க போல.?!  - Seithipunal
Seithipunal


விஜய் டிவி நடிகைகள் மற்றும் நடிகர்கள் எந்த அளவிற்கு பிரபலமோ அதே அளவிற்கு விஜய் டிவி தொகுப்பாளர்களும் பிரபலமானவர்கள் தான். அந்த வகையில் நிறைய ரசிகர்களுக்கு பிடித்த தொகுப்பாளினி தான் பிரியங்கா தேஷ்பாண்டே. 

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளினியாக இருப்பவர் VJ பிரியங்கா. நிறைய நிகழ்ச்சிகளை அவர் ஹாஸ்ட் செய்துள்ளார். பிரியங்காவை நம்பி மொத்த நிகழ்ச்சியையும் ஒப்படைக்கும் அளவிற்கு தனது திறமையை வளர்த்துக் கொண்டார். 

நகைச்சுவை தான் இவரது பிளஸ். பல நேரங்களில் மற்றவர்களைக் கலாய்த்தாலும் கூட, தன்னையும் அதில் இணைத்து கலாய்த்து மற்றவர்களுக்கு சிரிப்பு மூட்டுவது பிரியங்காவின் வழக்கம். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரியங்கா நிறைய நெகட்டிவ் கமெண்டுகளை பெற்றார். 

அவரது ரசிகர்கள் பலரும் அவரை வெறுக்க பிக்பாஸ் நிகழ்ச்சி காரணமாக இருந்தது. இந்நிலையில், பிரியங்காவின் சம்பளம் குறித்த தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

ஒரு எபிசோடுக்கு அவர் இரண்டு லட்சம் வாங்குவதாக கூறப்படுகிறது. மேலும் வரி உள்ளிட்டவை பிடித்தது போக பாதி பணம் தான் பிரியங்காவுக்கு வரும் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் பலருக்கு ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay tv priyanka salary per episode


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->