பொதுமக்களுக்கு இலவசமாக தக்காளி வழங்கிய விஜய் சேதுபதி ரசிகர்கள்.. பொதுமக்கள் பாராட்டு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதன்படி ஒரு கிலோ தக்காளி விலை 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 100 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

இதனை கட்டுப்படுத்த தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது அதன்படி தமிழக அரசு சார்பில் தக்காளி விலை உயர்வை கட்டுப்படுத்தவும் அரசு சார்பில் குறைந்த விலைக்கு தக்காளியை விற்பனை செய்யவும் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு அரசு சார்பில் தக்காளியை கொள்முதல் செய்து பசுமை கடைகள் மூலம் கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் ரேஷன் கடைகளில் தக்காளி விற்பனையை தொடங்கிய தமிழக அரசு சென்னையில் முதற்கட்டமாக 82 ரேஷன் கடைகளின் மூலம் தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் அவ்வப்போது பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகின்றனர். அந்த வகையில் விஜய் சேதுபதி ரசிகர்கள் சென்னை ஆலந்தூரில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இலவசமாக தக்காளி வழங்கினர். தற்போது இதற்கு பொதுமக்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay sethupathi fans free tomoto to public


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->