ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா திருமண புகைப்படம் வைரல்.! ரகசிய திருமணமா? ரசிகர்கள் ஷாக்.!  - Seithipunal
Seithipunal


விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவரும் காதலிப்பதாக அடிக்கடி செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும். இருப்பினும் இதுவரை இந்த விஷயங்கள் குறித்து இரு தரப்பினரும் எதிர்ப்பு ஆதரவோ தெரிவிக்கவில்லை. அவர்களது கெமிஸ்ட்ரியை ரசிகர்கள் அனைத்து மேடைகளிலும் ரசித்து வருவார்கள். 

இந்த நிலையில் இவர்கள் புதுமண தம்பதிகளாக இருப்பதைப் போல ஒரு போட்டோஷாப் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதில் ராஷ்மிகா திருமணப் பெண்ணை போல லெகங்கா அணிந்துள்ளார். விஜய் தேவரகொண்டா ஷெர்வானி அணிந்து கொண்டு மாப்பிள்ளை போல ஜோராக இருக்கிறார். 

இந்த திரைப்படம் சமூக வலைதளங்களில் பரவி இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார் என்று வதந்தியாகி இருக்கிறது. சில ரசிகர்கள் இது உண்மையோ பொய்யோ ஆனால் பார்ப்பதற்கு சூப்பரா இருக்கு என்று கமெண்ட் போட்டு வருகின்றனர். 

இவர்கள் இருவரும் டியர் காம்ரேட் உள்ள படங்களில் நடித்த போது காதலித்து வந்ததாகவும், அதன் பின் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட்டு நண்பர்களாக மட்டும் தொடர்ந்ததாகவும் கூறப்பட்டது. சமீபத்தில், விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படம் தோல்வியை தழுவிய பின் இந்த காதல் மீண்டும் பூத்துக் குலுங்க துவங்கியுள்ளதாக தகவல்கள் கசிந்து வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijay d konda rashmika mandhana photoshop


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->