வலிமை படத்தை 5 முறை பார்த்து ரசித்த வெறித்தனமான ரசிகர்.! நடிகை வெளியிட்ட பதிவு.!  - Seithipunal
Seithipunal


கோலிவுட்டின் மிக முக்கிய நடிகராக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவருடைய நடிப்பில் கடந்த மூன்றாண்டுகளாக உருவாக்கி வந்த திரைப்படம் தான் வலிமை. போனி கபூர் இயக்கிய இந்த திரைப்படத்தை எச்.வினோத் இயக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். 

கடந்த 24-ந் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த திரைப்படம் வெளியாகியது. ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்கள் பெற்று வருகின்றது. அத்துடன் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷனில் பின்னி பெடல் எடுத்து வருகின்றது. 

இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக பிரபல பாலிவுட் நடிகை ஹியூமா குரோஷி நடித்து இருக்கின்றார். இவர் தன்னுடைய டுவிட்டர் தலத்தில் தற்போது தான் நடித்த வலிமை படத்தை தொடர்ந்து 5 முறை பார்த்த ஒரு ரசிகர் குறித்து பதிவிட்டு இருக்கின்றார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "இவர் பெயர் குமார். சென்னையில் இருக்கின்ற கிரவுன் பிளாசா ஓட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். பிப்ரவரி 24-ந் தேதி வெளியாகிய வலிமை திரைப்படத்தை 5 முறை பார்த்து இருக்கின்றார். லவ் யூ குமார். நீங்கள் தான் எனது உண்மையான ரசிகர். உங்களுடைய அன்புக்கு மிகவும் நன்றி." என்று தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

valimai fan seen movie 5 time


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->