தமிழகத்தில் இந்தி படத்தை வெளியிடும் உதயநிதி.! செய்தியாளர் கேட்ட அதிர்ச்சி கேள்வி.! - Seithipunal
Seithipunal


அமீர்கான் நடிப்பில் வரும் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் தான் லால் சிங் சத்தா திரைப்படம். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. 

இது குறித்த செய்தியாளர் சந்திப்பின்போது உதயநிதியிடம், 'இந்தி தெரியாது போடா' என்று டீசர்ட் அணிந்து எதிர்ப்பு தெரிவித்த நீங்கள் தற்போது இந்தி படத்தை தமிழகத்தில் அனுமதிக்கலாமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு உதயநிதி, "இந்தி தெரியாது போடா என்பது இந்தி திணிப்பிற்கு எதிரானதுதானே அன்றி, இந்தி மொழியை கற்றுக் கொள்ளக் கூடாது என்றோ, இந்தி படத்தை தமிழகத்தில் வெளியிட கூடாது என்றோ அர்த்தமாகாது. 

இந்தி மொழியை விருப்பப்பட்டு யாரேனும் கற்றுக் கொண்டால் அதில் எனக்கு எந்த விதமான முரண்பாடும் இல்லை. ஆனால், அதை திணிக்க முயல்வது தான் திமுகவின் கொள்கைக்கு எதிரானது. மொழியைத் தாண்டி எனக்கு அமீர் கானின் நடிப்பு மிகவும் பிடிக்கும். இது ஒரு ஃபேன்பாய் தருணம் என்று கூட சொல்லலாம்." என உதயநிதி தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Udhayanithi about Lal Singh satha Movie


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->