திருவண்ணாமலைக்கு தனது மனைவியுடன் சென்ற நடிகர் அருண் விஜய்! ரசிகர்களுடன் செல்பி! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம்வருபவர் நடிகர் அருண் விஜய். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான "யானை" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

மேலும், அருண் விஜய் வில்லன் கதாபாத்திரத்தில் அனைவரையும் கவரக்கூடியவர். தற்போது இவர் நடித்த 'மிஷன்' திரைப்படம் விரைவில் திரையங்குகளில் வெளிவர உள்ளது. 

இதனை தொடர்ந்து, இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' திரைப்படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில், திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் தனது மனைவியுடன் ராஜகோபுரம் முன்பு அண்ணாமலையாரை வணங்கினர். 

பின்னர் கோவிலையொட்டியுள்ள 14 கிலோமீட்டர் மலையைச் சுற்றி நேற்று நள்ளிரவு தனது ரசிகர்கள் பட்டாளத்துடன் கிரிவலம் வந்தடைந்தார். 

கிரிவலப் பாதையில் உள்ள அஷ்ட லிங்கத்திற்கு நெய்விளக்கு ஏற்றி, சிறப்பு வழிபாடு செய்ததை தொடர்ந்து, இடுக்கு பிள்ளையார் கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். நடிகர் அருண் விஜயுடன் கிரிவலம் சென்ற ரசிகர்கள் பலரும் செல்பி எடுத்துக்கொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai kovil actor Arun Vijay with his wife


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->