"நீங்களும் க்யூட்டா இருக்கீங்க." விஜயுடன் வீடீயோகாலில் குட்டி ரசிகை.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய். சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை ஏராளமான ரசிகர் பட்டாளம் தமிழகத்தில் இவருக்கு இருக்கிறது. லியோ திரைப்படத்தின் படப்பிடிப்புகளில் பிஸியாக இருக்கும் இவர் தற்போது காஷ்மீரில் சூட்டிங் முடிந்து சென்னை வந்திருக்கிறார்

தற்போது நடிகர் விஜய் தனது குட்டி ரசிகை ஒருவருடன் வீடியோ காலில் பேசிய சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இந்த வீடியோவும் ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. என்ன விஜய் அங்கிள் எங்க வீட்டுக்கு எல்லாம் வர மாட்டீங்களா? என கேட்ட குழந்தைக்கு வீடியோ கால் செய்து  சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார் தளபதி.

அவர்களிருவரும் பேசும் வீடியோ தற்போது இணையதளங்களை கலக்கிக் கொண்டிருக்கிறது. தளபதியுடன் பேசும் அந்த குழந்தை "நீங்கள் சாப்பிட்டீர்களா? நீங்களும் க்யூட்டா இருக்கீங்க" என அக்கறையுடன் நலமுடனும் தளபதியை விசாரித்து வருகிறது.

அந்தக் குழந்தையுடனும் அவர்களது பெற்றோருடனும் சிறிது நேரம் உரையாடி மகிழ்ந்த விஜய் பின்னர் அவர்களிடம் இருந்து பிரியா விடை பெற்றார். தளபதி என்றாலே யாருடனும் பேச மாட்டார், திமிர் பிடித்தவர் போல இருப்பார் என்ற  எண்ணங்களைபலரது மனதிலிருந்து அழிப்பதற்காக இவ்வாறு தன்னை சோஷியல் படுத்திக் கொள்கிறார் விஜய் என அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thalapathi vijay interacting to a little fan through video call went on viral


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->