''சூரரைப் போற்று'' ஹிந்தி ரீமேக் ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


சுதா கொங்காரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான திரைப்படம் ''சூரரைப் போற்று''. 

சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த திரைப்படத்திற்காக சூர்யாவுக்கும், இயக்குனர் சுதா கொங்காராவுக்கும் தேசிய விருது கிடைத்தது. 

இதனை தொடர்ந்து சூரரை போற்று திரைப்படத்தை சுதா, ஹிந்தி ரீமேக் செய்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடித்துள்ளார். 

சூர்யா இணை தயாரிப்பாளராக இணைந்துள்ள இந்த திரைப்படத்திற்கு ''சர்ஃபிரா'' என பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படம் வருகின்ற ஜூலை 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Soorai Pottru Hindi Remake Release Update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->