'தலைவா யூ ஆர் கிரேட்'- ரஜினியை பாராட்டி நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்! - Seithipunal
Seithipunal


நடிகர் ரஜினிகாந்த் 'மாவீரன்' படத்தை பார்த்துவிட்டு நடிகர் சிவகார்த்திகேயனை பாராட்டி உள்ளார். இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிக்கும் வகையில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். 

நடிகர் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடித்துள்ள படம் மாவீரன். இந்த படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இதில் இயக்குனர் மிஷ்கின் வில்லனாகவும் நடிகை சரிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

அய்யனார் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் பணிகளை செய்துள்ளார். கடந்த மாதம் இப்படம் தமிழ், தெலுங்கு பைலிங்குவல் படமாக வெளியானது. 

நடிகர் ரஜினிகாந்த் இந்த படத்தை சமீபத்தில் பார்த்து சிவகார்த்திகேயனை தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு  வாழ்த்து தெரிவித்தார். 

இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் இன்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ''நேற்றே இந்த வீடியோவை போட்டிருக்க வேண்டும். நான் காஷ்மீரில் இருந்ததால் போட முடியவில்லை. 

25 நாட்களை 'மாவீரன்' படம் கடந்துள்ளது. இதற்கு காரணமான மக்கள் அனைவருக்கும் நன்றி. மாவீரன் படம் பார்த்துவிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எனக்கு போன் செய்து வாழ்த்தினார்.

அது எங்கள் ஒட்டுமொத்த பட குழுவினருக்கும் மிகவும் சிறப்பான ஒரு தருணம். 'ஜெயிலர்' பட வேலைகளுக்கு நடுவில் நேரம் ஒதுக்கி என் படத்தை பார்த்து எனக்கு மட்டும் இன்றி என் குழுவினர் அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தது, ''தலைவா யூ ஆர் ஆல்வேஸ் கிரேட்''.

நான் உங்கள் ரசிகன் என்பதை எப்போதும் சொல்வேன். உங்களைப் பார்த்து சினிமாவுக்கு வந்தவன் நான். உங்களுக்கு பேனர் வைத்துக் கொண்டாடிய எனக்கு நீங்கள் படம் பார்த்து விட்டு வாழ்த்து தெரிவித்தது என் வாழ்நாள் சாதனை. 

உங்கள் சரித்திரத்தில் 'ஜெயிலர்' படம் இன்னொரு சிறப்பான படமாக இருக்கும்'' என்று சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan thanked Rajini


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->