ஓயாத வசூல் வேட்டையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்.. மொத்த வசூல் இவ்வளவா.? - Seithipunal
Seithipunal


சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் இதுவரை 89 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் பிரபல ங இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய திரைப்படங்கள் சிறுவர்கள் முதல் முதியோர்கள் வரை ரசிக்கும் படியாக இருக்கும். அதன்காரணமாக சிவகார்த்திகேயனின் திரைப்படத்திற்கு திரையரங்குகளில் குடும்பமாக வந்து ரசித்து செல்கின்றனர்.

இந்த நிலையில் மண்டேலா திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் கடந்த ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் அதிதி சங்கர், இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

சாந்தி டாக்கிஸ் நிறுவனம் தயாரித்திருந்த, இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்திருந்தார். ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற மாவீரன் திரைப்படம் இதுவரை 89 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan in maveeran movie collected 89 crores


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->