வாயை பிளக்க வைக்கும் 'மாவீரன்' படத்தின் வசூல்.. படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் திரைப்படம் 75 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் இருந்து படிப்படியாக முன்னேறி வெள்ளித் திரையில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவருடைய திரைப்படங்கள் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் இருக்கும்.

இந்த நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் மண்டேலா திரைப்படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் கடந்த ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் இயக்குனர் மிஷ்கின், நடிகை சரிதா, மோனிஷா, யோகி பாபு உள்ளிட்ட திரைப்படங்கள் பலரும் நடித்துள்ளனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

மாவீரன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிய 10 நாட்கள் ஆன நிலையிலும், ரசிகர்களின் முழு ஆதரவுடன் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இந்த நிலையில் மாவீரன் திரைப்படம் உலக அளவில் மொத்தமாக 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sivakarthikeyan in maveeran movie collected 75 crores


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->