ஜெயம் ரவியின் 'சைரன்' திரைப்படம் ரிலீஸ் ஆகாதா? ஏமாற்றமடைந்த ரசிகர்கள்! - Seithipunal
Seithipunal


ஆண்டனி பாக்கியராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சைரன்'. இந்த திரைப்படத்தை சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார். இதில் கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சமுத்திரகனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

குடும்ப அம்சங்களுடன் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி இரண்டு தோற்றங்களில் நடித்துள்ளார். 

ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தை எஸ்.கே. செல்வகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. 

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 'சைரன்' திரைப்படம் வருகின்ற 26 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகாமல் ஜீ 5 ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த தகவல், மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்த ரசிகர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

siren movie release update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->