நகைச்சுவை பாணியில் உருவாகியுள்ள 'சிங்கப்பூர் சலூன்' ரிலீஸ் அப்டேட்! - Seithipunal
Seithipunal


எல்கேஜி, மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் போன்ற திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் ஆர்.ஜே. பாலாஜி. 

தமிழ் நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள இவர் எல்கேஜி என்ற திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கதாநாயகனாக வலம் வருகிறார். 

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படத்திற்கு 'சிங்கப்பூர் சலூன்' என பெயரிடப்பட்டுள்ளது. 

இந்த திரைப்படம் நகைச்சுவை பாணியில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி தாடி மீசை இல்லாத ஒரு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ள இந்த திரைப்படத்தை ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். சத்யராஜ், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த திரைப்படம் வருகின்ற 25ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Singapore Saloon release update


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->