இந்தியாவின் வசூல் சக்கரவர்த்தி ஷாருக்கான்.. 3 நாட்களில் 300 கோடி வசூலை அள்ளிய ‘பதான்’ திரைப்படம்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த்தின் இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கான் மற்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் பதான். இதில், இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் என்ற பாடல் வெளியாகி ஆபாசத்தின் உச்சமாக இருப்பதாக பல சர்ச்சைகளும் கிளம்பியது.

இந்த பாடல் இதுவரை 15 கோடிக்கும் மேலான பார்வையாளர்களை கடந்து யூடியுப் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்து இருக்கின்றது. இதில், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடையில் ஒட்டு மொத்த கவர்ச்சியும் காட்டி ஆபாசமாக ஆடியிருப்பார். 

இதற்கு, காவி உடை அணிந்து இந்து மதத்தை இழிவு படுத்துவதாக இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் பதான் திரைப்படத்திற்கு ஓரளவு பாசிட்டிவான விமர்சனங்கள் வரும் நிலையில், ஷாருக்கானுக்கு ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் ஷாருக்கானின் பதான் திரைப்படமானது 3 நாளில் இந்தியாவில்  313 வசூல் செய்துள்ளது. மேலும் வெளியான ஒரே நாளில் 113 கோடி வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sharukh Khan in pathan movie 313 crores collected


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->