எம்மா.. நான் அப்பாவாகிட்டேன்..!! சென்றாயன் - கயல்விழி தம்பதிக்கு அழகான குழந்தை.!! - Seithipunal
Seithipunal


நடிகர் தனுஷின் பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆகியவர் சென்ட்ராயன். இந்த படத்தில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தவே., இதனை தொடந்து சிலம்பாட்டம்., ஆடுகளம் மற்றும் மூடர்கூடம் போன்ற பல படங்களில் நடித்திருந்தார். 

இந்த படங்களுக்கு அடுத்த படியாக நடிகர் ஜீவாவின் ரௌத்திரம் திரைப்படத்தில் வில்லன் கதாபாரத்தில் நடித்ததன் மூலமாக நல்ல வரவேற்பை பெற்றார். இதற்கு அடுத்தபடியாக தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற "பிக்பாஸ்" நிகழ்ச்சியின் மீண்டும் தன்னை அடையாளப்படுத்தி கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர் தனது குழந்தை தனமான பேச்சின் மூலமாக மக்களின் ஆதரவை பெற்று இருந்தார். அந்த நேரத்தில் இவரது மனைவி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. மேலும்., இவர்களுக்கு திருமணம் முடிந்து நான்கு வருடங்கள் குழந்தை பிறக்கவில்லை என்ற கவலையில் இருந்து வந்தார். 

இதனை சக போட்டியாளர்கள் மற்றும் நேயர்களிடம் தெரிவித்து வருத்தப்பட்டிருந்த வேளையில்., பிக் பாஸ் இல்லத்திற்கு வந்த சென்றயானின் மனைவி தாம் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தவுடன் அவர் வெளியப்படுத்திய பேரானந்தத்தை மக்கள் கண்டு வியந்தே போனார்கள். 

இதனையடுத்து நிகழ்ச்சியின் இறுதியில் சென்றாயனின் மனைவி கயல்விழிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி வைத்தனர். இந்நிலையில்., இவர்கள் இருவருக்கும் நேற்று இரவு ஆண்குழந்தை பிறந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

English Summary

sendrayan have a cute male baby


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal