தடை விதிக்க முடியாது.. "விஜய் சேதுபதிக்கு" அதிர்ச்சி கொடுத்த உச்சநீதிமன்றம்.!! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகர் விஜய் சேதுபதி கடந்த 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் பெங்களூர் விமான நிலையத்தில் நடிகர் மகா காந்தியுடன் சண்டையிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.  சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் விமானத்தில் விஜய் சேதுபதி மற்றும் மகா காந்தி ஆகியோர் பயணித்தபோது இருவருக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இந்த வாக்குவாதம் கடுமையாக முற்றி பெரிய சண்டையாக மாறியது.  விமானத்திற்குள் நடைபெற்ற சண்டை விமானத்தை விட்டு இறங்கியதும் தொடர்ந்ததால் பெங்களூரு விமான நிலையத்தில் விஜய் சேதுபதி தரப்பினருடன் நடிகர் மகா காந்தி சண்டையிட்ட வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பேசும்பொருளாக மாறியது.


இதனை  தொடர்ந்து, நடிகர் மகா காந்தி தன்னை விஜய் சேதுபதி தாக்கியதால் தனக்கு இழப்பீடு வழங்கக் கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.  இந்த வழக்கை விசாரித்த சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம், விஜய் சேதுபதியை நேரில் ஆஜராக உத்தரவிட்டு சம்மன் அனுப்பியது.  மகா காந்தி மனு தாக்கல் செய்ததை  தொடர்ந்து, நடிகர் விஜய் சேதுபதியும் தாக்கல் செய்த பதில் மனுவில், லாப இழப்பீடு கோரிய மகா காந்தியின் மனுவை அபராதத்துடன் ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டு குறிப்பிட்டிருந்தார்.  

இதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதி, மகா காந்தி தாக்கல் செய்த வழக்கை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதன் பின்னர் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பொழுது நடிகரான மனுதாரர் தெரிவித்த கருத்துகள் பொது வெளியில் கவனத்தை பெறுகின்றது. நடிகர்கள் கட்டுப்பாடுடன் நடந்திருக்க வேண்டும், பொறுப்புள்ள நபராக யாரையும் அவதூறாக பேசக் கூடாது.

மேலும், பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண அறிவுறுத்தி இரு தரப்பினரும் ஆஜராக உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் கிரிமினல் அவதூறு வழக்கை ரத்து செய்யக் கோரி விஜய் சேதுபதி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் நடிகர் விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு வழக்கு பதிவு செய்ய தடை விதிக்க மறுத்ததோடு,அவதூறு வழக்கை கீழமை நீதிமன்றத்தில் சந்திக்க விஜய் சேதுபதிக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sc allowed criminal defamation case file against actor Vijay Sethupathi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->