அதே பொலிவுடன் மீண்டும் சமந்தா.. அந்த நடிகருடன் கோவிலுக்கு விசிட்! ரசிகர்கள் ஹேப்பி.! - Seithipunal
Seithipunal


இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. இவர்  நீதானே என் பொன் வசந்தம், பானா காத்தாடி போன்ற  திரைப்படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் அறியப்பட்டவர். அதன் பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

தமிழ் சினிமா மட்டுமல்லாது தெலுங்கு, ஹிந்தி மற்றும் வெப் சீரிஸ் என  தன்னுடைய கடின உழைப்பின் மூலம் நடிப்பு முத்திரையை திரை உலகில் பதித்தவர். தெலுங்கு சினிமாவின் பிரபல நடிகரான நாகார்ஜுனாவின் மகன் நாகா சைதன்யாவை திருமணம் செய்து கொண்ட இவர்  2021 ஆம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

அதன் பிறகு தன்னுடைய கடினமான உழைப்பின் மூலம் சினிமாவில் முழு கவனம் செலுத்தி வந்தவருக்கு   மயோசைட்டிஸ் நோய் தாக்கியது. அந்த நோய்க்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் தற்போது அந்த நோயிலிருந்து முழுவதும் குணமடைந்து மீண்டும் தன்னுடைய கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

மீண்டும் நடிப்பில் பிஸியாகிவிட்ட சமந்தா உடற்பயிற்சி பாக்ஸிங் பயிற்சி என ஒவ்வொரு நாளும் தன்னை மெருகேற்றிக் கொண்டே வருகிறார். இவரது நடிப்பில் உருவான சாகுந்தலம் என்ற திரைப்படம் தற்போது வெளியாக இருக்கும் நிலையில் அந்த திரைப்படத்தின் கதாநாயகனுடன் கோவிலுக்கு சென்று வந்த சமந்தாவின் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் சமந்தாவின் பழைய கலையான முகம் வந்துவிட்டது என  சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samantha photos withsakuntalam hero went virral on social media


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->