"நான் எப்போதும் அப்படி சொல்லவில்லை"! நாக சைதன்யாவின் டேட்டிங் செய்திக்கு விளக்கம் தந்த சமந்தா.! - Seithipunal
Seithipunal


தென்னிந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக இருப்பவர் சமந்தா. இவர் சில நாள் உடல் நலக்குறைவிற்கு பிறகு  தற்போது திரைப்படங்களில் முழுவதுமாக நடித்து வருகிறார். இவரது நடிப்பில் உருவான சாகுந்தலம் என்ற திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது.

சமந்தா தெலுங்கு பட சூப்பர் ஸ்டார் நாகார்ஜுனாவின் மகன் நாகா சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  ஆனால் இந்த ஜோடி  சில நாட்களுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டது . அதன் பிறகு சமந்தா தனது நடிப்பு மற்றும் உடற்பயிற்சி என  கேரியரில் கவனம் செலுத்தி வருகிறார்.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த சோபிதா துலிபாலாவை, நாகா சைத்தன்யா டேட்  செய்து வருவதாக வெளியான செய்திகளுக்கு "யார் யாருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தாலும் எனக்கு அது தேவையில்லை" என சமந்தா பதிவு செய்ததாக சில தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் அந்த சம்பவத்திற்கு விளக்கமளித்து இருக்கிறார் நடிகை சமந்தா. இது தொடர்பாக பதிவிட்டிருக்கும் அவர் அந்தச் செய்தியை பகிர்ந்து  "நான் எப்போதும் அப்படிச் சொன்னதில்லை" என அந்தப் பதிவில் குறிப்பிட்டிருக்கிறார். சமந்தாவின் இந்த பதிவிற்க்கு ரசிகர்கள்  லைக் செய்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

samantha gave a befiting reply to the rumours


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->