மூன்று நாட்களில் நானூறு கோடியை நெருங்கிய சலார்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள படம் ‘சலார்’. ஹோம்பாளே பிலிம்ஸ் சார்பில் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ளார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பான் இந்தியா முறையில் நேற்று முன்தினம் டிசம்பர் 22-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
மக்களிடையே கலவையான விமர்சனங்களைப் பெற்று வரும் இந்தப் படம், முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.178.7 கோடியை வசூல் செய்தது. 

இதனால், இந்த ஆண்டு வெளியான படங்களில் முதல் நாளில் அதிகபட்ச வசூலைக் குவித்த படம் என்ற பெருமையை ‘சலார்’ திரைப்படம் பெற்றுள்ளது. இந்த நிலையில், இந்தப் படம் வெளியாகி மூன்று நாட்கள் ஆன நிலையில், உலகம் முழுவதும் ரூ.402 கோடியை வசூல் செய்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

salar movie 402 crores collection in three days


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->