13 வயதில் உன்னால் முடியுமா? என்று விஜயை கேட்டேன்... விஜய் அரசியலுக்கு ரஜினி பச்சைக் கொடி! இனி நோ காக்கா - கழுகு பைட்!! - Seithipunal
Seithipunal



விஜய் - அஜித் என்று இருந்த மோதல் எப்படி ரஜினி - விஜய் என்று ஆனது என்ற கேள்வி ரசிகர்களின்   கேள்விக்கு ஒரு சின்ன பிளாஷ் பேக்...... 

அண்ணாமலை தம்பி இங்கே ஆடவந்தேன்டா, என்வாத்தியார் சூப்பர்ஸ்டார், மஜுன்னு மஜுன்னு மஜுன்னு மஜுண்டா..இவன் பார்த்த சின்ன ரஜினிதான்.... என்று பாடல் வரிகளில் ரஜினியின் வாரிசாக 90 களிலேயே தன்னை காட்டிகொன்ட  விஜய், இளைய தளபதி என்ற பட்டமே ரஜினி நடித்த தளபதி படம் வந்த போது   என்னுடைய பேன் ஒருவர் இளையதளபதி என்று குறிப்பிட்டிருந்தார் அதன் பின்புதான் நான் இளையத்தளபதி ஆனேன் என்று ஒரு பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.

மற்றொரு படத்தில்  இவனுக்கு முருகரை பிடிக்கும், இவனுக்கு ஆஞ்சநேயரை பிடிக்கும்.. என்று கூறிவிட்டு எனக்கு பாபாவை பிடிக்கும் என்று பாபா முத்திரையை காட்டி ரஜினி மீதான தன் பாசத்தை வெளிப்படுத்தி இருப்பார். சன் டிவியில் ஒளிபரப்பான மற்றொரு படியில் ரஜினி ரூட் தான் என் ரூட் என்றும் கூறிருப்பார்.  


 

ஒரு கட்டத்தில் விஜயின் மார்க்கெட் விரிவடைந்து படத்தின் வியாபாரமும், வசூலும் ஜெட் வேகத்தில் உயர தொடங்கியது. அப்போது அஜித் படங்களில் இருந்து விலகி கார் ரேஸ், சுற்றுலா என்று நேரத்தை செலவைவிட,, அவரின் படங்கள் பாக்ஸ் ஆஃபிஸில் விஜயிடம் போட்டிபோடா  முடியவில்லை. இதன் பிறகு விஜய் ரஜினியை முந்திவிட்டார் என்று  பிஸ்மி போன்ற திரை விமர்சகர்கள் சோசியல் மீடியாவில் கொளுத்திப்போட..அப்போது தொடங்கியதுதான் இந்த ரஜினியா  விஜயா என்ற சண்டை..

இந்த விவகாரத்திற்கு  மேலும் தூபம் போட்ட பெருமை சரத்குமாரைதான் சேரும். வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று நடிகர் சரத்குமார் திரியை கொளுத்தி போட, பெரிய சர்ச்சையாகி ரஜினி விஜய் ரசிகர்கள் போட்ட சண்டையால் சோசியல் மீடியாவே ஸ்தம்பித்தது. பிரிச்சானை சற்று ஓய்ந்த நிலையில், ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சில் சூப்பர் ஸ்டார் ரஜினி காக்கா - கழுகு கதை சொல்லிவிட்டு, அதோடு நிற்காமல்... நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை என்று கூறி... சும்மா இருந்த சங்கை தன் பங்கிற்கு  ஊதி விட்டு செல்ல... .  விடுவார்களா நம் ரசிக கண்மணிகள்..... மீண்டும் வெகுண்டெழுந்து... சோஷியல் மீடியாவை தங்களின் வார்த்தை போரால் ஒருவரை ஒருவர் சகட்டுமேனிக்கு அர்ச்சனை செய்து கொண்டனர். இதற்கு பதிலடி தளபதி விஜய் லியோ ஆடியோ லஞ்சில் தருவார் என்று ரசிகர்கள் காத்துக்கிடக்க.... இசைவெளியீட்டு விழா ஏதோ ஒரு காரணத்திற்க்காக நடைபெறாமல் போனது.

லியோ படம் ரிலீஸ் ஆனதும் முதல் நாளில் இருந்தே 650 கோடி ஜெயிலர் வசூலை முந்தி விட வேண்டுமென்று கங்கணம் கட்டிக்கொண்டு இறங்கிய விஜய் ரசிகர்களும், பட  நிறுவனமும் எதிர்பார்த்த படியே முதல் நாள் வசூல் 146 கோடி என அறிவித்தது. பெரும்புள்ளிக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்ததாக பட நிறுவனமே ட்விட் போட்டு லியோ ஜெயிலர் வசூலை பீட் செய்துவிட்டதாக  சூசகமாக தெரிவித்தது. 

பின்னர் லியோ பட வெற்றி விழாவில். ரசிகர்கள் ஆரவாரத்திற்கிடையே  எதிர்பார்த்தபடியே குட்டிக்கதையுடன் மைக்கை பிடித்த விஜய், தந்தை மகன் கதையை கூறிய பின், காடுன்னா சிங்கம், புலி, என்று கூறிவிட்டு அதாங்க.... இந்த காக்க.. கழுகு... என்றுகூறி... சிரித்தபடியே ஒரு சுற்று சுற்றிவந்து மைக்கை பிடித்தபோது.. அரங்கத்தில் எழுந்த கரகோஷம் அடங்க சில நிடங்கள் ஆனது. பின்னர் புரட்சி கலைஞர் என்றால் விஜயகாந்த் ஒருவர்தான், உலக நாயகன் என்றால் அது ஒருவர்தான், சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்தார். இருந்தபோதிலும் சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. 

இந்நிலையில், லைக்கா தயாரிப்பில்  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள லால் சலாம் படத்தில் விஷ்ணுவிஷால், விக்ராந்துடன் சூப்பர் ஸ்டார் சிறப்பு தோற்றத்தில் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதன் ஆடியோ லாஞ்ச் நேற்று தாம்பரத்தில் நடைபெற்றது. 

அப்போது பேசிய ரஜினி, சமீபத்தில் நான் கூறிய காக்கா கழுகு கதையை வேறு மாதிரி மாற்றி விட்டுடாங்க. எனக்கும், விஜய்க்கும் ஏதோ போட்டி என்பது போல பேசுவது மனதுக்கு கஷ்டமாக இருக்கிறது. நடிகர் விஜய் என் கண்ணுக்கு முன்பு வளர்ந்த பையன். சின்ன வயதிலிருந்தே அவரை பார்த்து வருகிறேன். 'தர்மத்தின் தலைவன்' படப்பிடிப்பின்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் என்னிடம் வந்து, 'என்னுடைய பையன் படித்து வருகிறான், அவனுக்கு நடிப்பின் மீது ஆர்வம் அதிகமாக இருக்கிறது. படித்துவிட்டு நடிக்க வரட்டும். நீங்கள் கொஞ்சம் சொல்லுங்கள்' என்றார். அப்போது நான் விஜய்யிடம் 'உங்களால் முடியுமா?' என்று கேட்டேன், முடியும் என்றார். அதன் பிறகு விஜய் நடிப்பிற்கு வந்தார்.. உழைப்பால் உயர்ந்து உள்ளார். தற்போது நன்றாக நடித்து வருகிறார். தற்போது அரசியலுக்கு வரும் முயற்சியில் இருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகள்.

தற்போது விஜய்க்கும், எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலையாக உள்ளது. எனக்கு போட்டி நான் தான் என விஜய்யே கூறியிருக்கிறார. என் படத்துக்கு நான் தான் போட்டி என நானே சொல்லியிருக்கிறேன். விஜய்யை போட்டியாக நான் நினைத்தால் அது எனக்கு மரியாதையாகவும், கவுரவமாகவும் இருக்காது. அதேபோல என்னை அவர் போட்டியாக நினைத்தால், அது அவருக்கும் மரியாதையாக இருக்காது. தயவுசெய்து என்னுடைய மற்றும் அவருடைய ரசிகர்கள் காக்கா, கழுகு கதையை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள். இது என் அன்பான வேண்டுகோள்" இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

இவவாறு ரஜினி கூறியிருப்பதை இரு தரப்பு ரசிகர்களில் பெரும்பாலானவர்கள் வரவேற்றாலும். தனது மகள் இயக்கியுலா படம் ஊடுவதற்கான புரமோஷன் என்றும் ஒரு சிலர் விமர்சிக்கின்றனர். ஒரு விஜய் ரசிகர்களோ தளபதி அரசியலில் இறங்கும் நேரத்தில் உலகெங்கிலும் பரவி இருக்கும் ரஜினி ரசிகர்களின் ஆதரவு தேவை என்றும். அபோது தான் நாம் வலுவான திமுக அதிமுகவை எதிர்க்க முடியும் என்று தங்களின் நேர்மறையான வாதத்தை வைக்கின்றனர். 

எப்படியோ சூப்பர் ஸ்டார் ரஜினியே பெருந்தன்மையாக முன்வந்து இந்த காக்கா - கழுகு பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பது. சோசியல் மீடியாவில் இயங்கும் நடுநிலையான ரசிகர்கள்..... அப்பா இனிமையாவது காக்கா - கழுகு விட்டு விட்டு அணைத்து பறவைகளை பற்றியும் பேசுவார்களா என்று பெருமூச்சு விடுகிறார்கள்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rajinikanth lal salam audio launch vijay


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->