ரஜினியின் ஜெயிலர் படத்தின் அடுத்த அப்டேட் எப்போது?.. படக்குழு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தின் 2வது பாடல் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், நடிகை ரம்யா கிருஷ்ணன், தமன்னா, விநாயகன், யோகி பாபு, கன்னட நடிகர் சிவகுமார் உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசை அமைத்துள்ளார். 

இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி ஜெய்லர் திரைப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 10 ம் தேதி திரையரங்குகளில் வழியாக உள்ளது. இதனையடுத்து இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாத இறுதியில் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. 

இதனிடையே ஜெயிலர் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இந்த படத்தின் முதல் பாடலான 'காவாலா' எனத் தொடங்கும் ஐட்டம் பாடல் வெளியாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையை கிளப்பி வருகிறது.

இந்த நிலையில் தற்போது ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் பாடல் ரஜினியின் தொடக்கப் பாடலாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini in jailor movie 2nd single update tomorrow


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->