ரஜினியின் ஜெயிலர் படத்தின் மாஸ் பாடல் எப்போது ரிலீஸ்.? படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ரஜினி நடித்துள்ள 'ஜெயிலர்' படத்தின் இரண்டாவது பாடல் வரும் ஜூலை 17-ம் தேதி வெளியாகும் படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படத்தை பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

மேலும் இந்த திரைப்படத்தில் நடிகை தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், மோகன் லால், சுனில், ஜாக்கி ஷரப், யோகி பாபு உள்ளிட்ட திரை பிரபலங்கள் பலரும் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார்.

பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் இந்த திரைப்படத்தின் படிப்புகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


இதனையடுத்து ஜெய்லர் திரைப்படத்தின் படக்குழு அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடலான 'காவாலா' என்ற ஐட்டம் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் தற்போது இரண்டாவது பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

அதன்படி, ரஜினிகாந்தின் மாஸ் பாடலான 2வது பாடல் வரும் ஜூலை 17ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Rajini in jailor movie 2nd single release on July 16


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->