நகைச்சுவை நடிகர் இன்னசென்ட் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்.! - Seithipunal
Seithipunal


மலையாள சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக வலம் வந்தவர் இன்னசென்ட். கடந்த 1972 ஆம் ஆண்டு "நிருத்தசாலா" என்ற மலையாளப் படத்தின் மூலம் அறிமுகமாகிய இவர் இரகள், நெல்லு, கிலுக்கம் உள்பட சுமார் 700க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை நடிகராகவும், வில்லனாகவும், இன்னும் பல வேடங்களிலும் நடித்துள்ளார்.

அதுமட்டுமல்லாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிட்டு எம்பியுமானார். மலையாள நடிகர் சங்கத்தில் 15 வருடத்திற்கு மேல் தலைவராகவும் இருந்து உள்ளார். மலையாளத்தின் நகைச்சுவைப் பேரரசர்களில் ஒருவராகப் போற்றப்பட்ட இவருக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு தொண்டையில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. 

அதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை எடுத்து வந்தார். இந்த நிலையில் இன்னசென்ட் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நல குறைவினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் இவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இவரின் மறைவு செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்த திரை பிரபலங்கள், அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் தங்களது இரங்கல்களைத் தெரிவித்தும், நேரில் அஞ்சலி செலுத்தியும் வருகின்றனர். அந்த வகையில், இன்னசென்ட்டின் மறைவிற்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், "பார்வையாளர்களின் இதயங்களை நகைச்சுவையால் நிரப்பிய இன்னசென்ட் என்றென்றும் நினைவுகூரப்படுவார். அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள்" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prime minister modi condoles to comedy actor innocent passes away


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->