பொங்கல் திரைப்பட போட்டி: வெற்றி பெற்றது யார்? - Seithipunal
Seithipunal


2024 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தனுஷ் நடிப்பில் உருவான 'கேப்டன் மில்லர்', சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான 'அயலான்', அருண் விஜய் நடித்த 'மிஷன்' போன்ற திரைப்படங்கள் வெளியானது. 

மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியான அயலான், கேப்டன் மில்லர் திரைப்படங்கள் முதல் நாளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. 

ஆனால் இரண்டு படங்களும் கலவையான விமர்சனங்களை பெற்றது. அருண் விஜய் நடித்த மிஷன் திரைப்படத்திற்கு அதிக திரைகள் கிடைக்காததால் வசூல் பாதித்தது. 

ஆனால் தற்போது தமிழகத்தில் மிஷன் படத்துக்கு திரைகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அதே சமயத்தில் அதிக திரைகளில் வெளியான அயலான் திரைப்படம் கடந்த 7 நாட்களில் உலக அளவில் ரூ. 65 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகவும் கேப்டன் மில்லர் திரைப்படம் ரூ. 63 கோடி வசூலித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

மிஷன் திரைப்படம் ரூ.23 கோடி வசூலித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் பொங்கல் திரைப்பட போட்டியில் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் வசூலில் முன்னணியில் இருக்கிறது. 

இந்த வாரம் இறுதியிலும் ரசிகர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் இந்த மூன்று திரைப்படங்களும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal release Film update


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->