இசைப்புயல் கச்சேரியில் சர்ச்சை - திடீரென மேடையில் ஏறிய போலீசார் - வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


"ரோஜா" என்றத் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவர் தமிழ் சினிமாவில் ஜாம்பவானாக விளங்கிய பல இசையமைப்பாளர்களிடம் உதவியாளராக பணிபுரிந்து வந்தார்.

தமிழ் மொழி மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் தனது இசையை பரப்பி வருகிறார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான படத்தில் வந்த மல்லி பூ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

அதுமட்டுமல்லாமல், தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கும் இவரே இசையமைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் இவர் வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களுக்குச் சென்று இசைக் கச்சேரியும் நடத்தி வருகிறார்.

இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மான் நேற்று புனேவில் இசைக் கச்சேரி ஒன்று நடத்தியுள்ளார். இந்த இசைக் கச்சேரியை இரவு 10 மணி வரை மட்டுமே நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், ஏ.ஆர்.ரஹ்மான் கொடுக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி இசைக்கச்சேரி நடத்தியதால் காவல்துறையினர் திடீரென்று மேடையில் ஏறி கச்சேரியை நிறுத்தும்படி தெரிவித்துள்ளனர். இதனால் ஏ.ஆர் ரகுமான் பாதியிலேயே மேடையில் இருந்து வெளியேறியுள்ளார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி தற்போது வரலாகி வருகிறது. இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானுக்கு நடந்த இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

police stop AR Rahmaan programme in pune


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->