பூவே உனக்காக EX காதலியா இது.?! வைரலாகும் சமீபத்திய புகைப்படம்.! - Seithipunal
Seithipunal


விக்ரமன் இயக்கத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர். பி சவுத்ரி தயாரிப்பில் தளபதி விஜய், சங்கீதா, சார்லி, நம்பியார் ஆகியோர் நடிப்பில் உருவான திரைப்படம் பூவே உனக்காக. இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தத் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் அஞ்சு அரவிந்த்.

மலையாள முன்னணி நடிகையான இவர் பூவே உனக்காக திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அந்தத் திரைப்படத்தை தொடர்ந்து ஒன்ஸ்மோர், எனக்கொரு மகன் பிறப்பான், அருணாச்சலம், உன்னருகே நானிருந்தால், வானத்தைப்போல, வாஞ்சிநாதன்  உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

மலையாள சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்திருக்கும் அஞ்சு  பிற தென்னிந்திய மொழிகளான கன்னடம் மற்றும் தெலுங்கு சினிமாவிலும் நடித்திருக்கிறார். தற்போது இவர்  மலையாளத்தில் சின்னத்திரை தொடர்களில் நடித்து வருகிறார்.

வினைச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட அஞ்சுவிற்கு ஒரு மகள் இருக்கிறார். இவர் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படத்தையும் தனது குடும்ப உறுப்பினர்களின் புகைப்படங்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையதளங்களில் தற்போது வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Photos of Poove Unakaga heroine Anju aravind which have gone viral on Instagram


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->