ஷாருக்கானின் 'பதான்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அசத்தல் அப்டேட்.! - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த்தின் இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கான் மற்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் பதான். இதில், இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் என்ற பாடல் வெளியாகி ஆபாசத்தின் உச்சமாக இருப்பதாக பல சர்ச்சைகளும் கிளம்பியது.

இதில், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடையில் ஒட்டு மொத்த கவர்ச்சியும் காட்டி ஆபாசமாக ஆடியிருப்பார். 

இதற்கு, காவி உடை அணிந்து இந்து மதத்தை இழிவு படுத்துவதாக இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் பதான் திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற நிலையில் இந்திய அளவிலும் உலக அளவில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.

அந்த வகையில் பதான் திரைப்படம் உலக அளவில் 1000 கோடிக்கும் மேல் ரூபாய் வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இதன்மூலம் ஹிந்தி சினிமா வரலாற்றில் 1000 கோடி ரூபாய் வசூல் செய்த படமாக பதான் திரைப்படம் சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில் பதான் திரைப்படம் வரும் மார்ச் 22ம் தேதி அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pathan movie OTT release on March 22 in Amazon prime


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->