இந்திய சினிமாவில் வசூலில் முதலிடம் பிடித்த பதான் திரைப்படம்.. இதுவரை எத்தனை கோடி தெரியுமா? - Seithipunal
Seithipunal


இயக்குனர் சித்தார்த் ஆனந்த்தின் இயக்கத்தில் நடிகை தீபிகா படுகோன் மற்றும் ஷாருக்கான் மற்றும் நடிகர் ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்திருக்கும் படம் தான் பதான். இதில், இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் என்ற பாடல் வெளியாகி ஆபாசத்தின் உச்சமாக இருப்பதாக பல சர்ச்சைகளும் கிளம்பியது.

இதில், தீபிகா படுகோன் காவி நிறத்தில் பிகினி உடையில் ஒட்டு மொத்த கவர்ச்சியும் காட்டி ஆபாசமாக ஆடியிருப்பார்.

இதற்கு, காவி உடை அணிந்து இந்து மதத்தை இழிவு படுத்துவதாக இந்து அமைப்பினர் மற்றும் பாஜகவினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் ஷாருக்கானின் பதான் திரைப்படம் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்த நிலையில் பதான் திரைப்படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வரும் நிலையில், இந்திய அளவிலும் உலக அளவில் வசூல் சாதனை புரிந்து வருகிறது.

இந்த நிலையில் பதான் திரைப்படம் திரைப்படங்களில் வெளியாகி 17 நாட்களில் உலக அளவில் 901 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இந்தியாவில் மொத்தமாக ரூ.558.40 கோடி ரூபாயும் வெளிநாடுகளில் 342.60 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது. இந்தி சினிமா வரலாற்றில் பதான் திரைப்படம் அதிக வசூல் செய்த படமாக மாறியுள்ளது .


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pathan movie collected 901 crores


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->