ஏலியன்களுக்கு நாசா மூலம் அனுப்பப்படவுள்ள நிர்வாண புகைப்படம் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


ஏலியன்கள் அல்லது வேற்று கிரகவாசிகள் குறித்து பல்வேறு விசித்திரமான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. பலர் இந்த ஏலியன்களை நேரில் பார்த்ததாக கூறுகின்றனர்.

இது உண்மை என்பதை நிரூபிக்க அறிவியல்பூர்வமாக இதுவரை எந்த ஆதாரங்களும் இல்லை என்பதால் ஏலியன் குறித்த மர்மங்கள் தொடர்கின்றன. சமீபத்தில், அமெரிக்க நாட்டின் யூ.எஃப்.ஓ நிபுணர் நிக் போப் என்பவர் "வேற்றுக்கிரகவாசிகள் சீகல்ஸ் கடல் பறவையை உளவாளியாக பயன்படுத்தக் கூடும். எனவே மக்கள் இந்த பறவைகளிடம் உஷாராக இருக்க வேண்டும். மக்கள் இந்த பறவைகளைக் கண்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." என்று கூறியிருந்தார். 

நாசா விஞ்ஞானிகள் வேற்றுகிரகவாசிகளை ஈர்ப்பதற்காக மனிதர்களுடைய நிர்வாண புகைப்படங்களை விண்வெளிக்கு அனுப்ப திட்டமிட்டு இருக்கின்றனர். பெண் மற்றும் ஆணின் பிக்சலெட்டடு நிர்வாண புகைப்படத்தை அனுப்பி ஏலியன்களுடன் தொடர்பை ஏற்படுத்த வேண்டும் என்று அவர்கள் முடிவெடுத்துள்ளனர். இதன் மூலம் அவர்களுக்கு ஒரு செய்தியை அனுப்பி அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவது தான் இதன் நோக்கம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது ஏலியன்களுக்கு அனுப்பப்படவுள்ள நிர்வாண புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

NASA Releases nude picture for alien


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->