இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா.? வெளியான தகவல்.! - Seithipunal
Seithipunal


தமிழ் சினிமாவின் பிரபல இசையமைப்பாளரான ஜி வி பிரகாஷ் குமார் தமிழில் பொல்லாதவன், ஆடுகளம், அசுரன், ஆயிரத்தில் ஒருவன் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்து தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக உள்ளார்.

அதைத்தொடர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான டார்லிங் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், நாச்சியார் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான ஜெயில் மற்றும் பேச்சுலர் ஆகிய இரண்டு திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. 

சமீபகாலமாக திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தற்போது இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு சுமார் 75 கோடி எனக் கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Music director GV Prakash Kumar assets value information


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->